ஈரோடு - சேலம் ரயில் பாதையில் நிகழும் தொடர் கொள்ளை : வடமாநிலத்தவர் உள்ளிட்ட 300 பேரிடம் போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நிகழ்ந்த ரயில் கொள்ளை தொடர்பாக, வடமாநில நபர்களின் கைரேகைகளை சேகரித்து, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் ரயில் பாதையில் மர்ம நபர்கள் சிலர், பயணிகளிடம் நகைகளை கொள்ளையடித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, ரயில்வே உயர் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சங்ககிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட 300 பேரை, போலீசார், காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது கைரேகைகளை பதிவு செய்து சரி பார்த்தும் வருகின்றனர். அவ்வப்போது கொள்ளை சம்பவம் நிகழும், காளிப்பட்டி ரயில்வே பாலம் அருகே பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story