போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் முறைகேடு : பொங்கல் பரிசுத்தொகையை வழங்காமல் ரூ.5 லட்சம் கையாடல்

பழனியில் போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பொதுமக்களுக்கு அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகையை‌ வழங்காமல் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் முறைகேடு : பொங்கல் பரிசுத்தொகையை வழங்காமல் ரூ.5 லட்சம் கையாடல்
x
திண்டுக்கல் மாவட்டம் பழனி, பழனியாண்டவர் நகரில் உள்ள ரேஷன் கடையில் குமரேசன் என்பவர்,விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் குமரேசன் அதிகாரிகளுடன் சேர்ந்து பல்வேறு  முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அவருடைய மனைவி ரெங்கநாயகி புகார் தெரிவித்துள்ளார்.ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளை போலியாக அச்சடித்து, அதன்மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, பருப்பு,  உள்ளிட்ட பொருட்களை கையாடல் செய்து வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.பொங்கல் விழாவிற்கு அரசு கொடுத்த பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் பணத்தை சிலருக்கு மட்டுமே வழங்கிவிட்டு, மற்றவர்களுக்கு வழங்காமல் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகாரிகளின் துணையோடு கையாடல் செய்ததாகவும் ரெங்கநாயகி  தெரிவித்துள்ளார்.மேலும், குமரேசன் வீட்டில் வைத்துள்ள ஏராளமான போலி ஸ்மார்ட் கார்டுகளை பறிமுதல் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெங்கநாயகி கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்