கிரிவல பாதையில் இடிக்கப்பட்ட மாரியம்மன் கோயில் : உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி, இடிக்கப்பட்ட மாரியம்மன் கோவிலுக்கு பதில் மாற்று இடத்தில் புதிய கோவில் கட்டிக் கொடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிரிவல பாதையில் இடிக்கப்பட்ட மாரியம்மன் கோயில் : உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்
x
திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி, இடிக்கப்பட்ட மாரியம்மன் கோவிலுக்கு பதில் மாற்று இடத்தில் புதிய கோவில் கட்டிக் கொடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சோனநந்தி தோப்பு என்ற இடத்திற்கு எதிரில் அமைந்திருந்த மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டது. இதை எதிர்த்து திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவபாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, இடிக்கப்பட்ட கோவிலை அதே இடத்தில் மீண்டும் கட்டித் தருவது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் தரப்பு, மாற்று இடத்தில்  இந்த கோவிலை கட்டித் தர தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆறு மாதங்களில் மாற்று இடத்தில் கோவில் கட்டிக் கொடுக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்