நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு, நாடு முழுதும் 155 நகரங்களில் இன்று நடத்தப்படுகிறது. 15 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கி, 5 மணிக்கு நிறைவுபெறுகிறது. தமிழ் மொழி கேள்வித்தாளில் தவறு இருப்பதாக கருதினால், ஆங்கிலத்தில் உள்ள கேள்வியை படித்துவிட்டு பதிலளிக்கலாம். அணிகலன்கள், உணவுப் பொருட்கள், எழுது பொருட்களை எடுத்து வரக்கூடாது. தேர்வு எழுத தேவையான பால்பாயின்ட் பேனா தேர்வறையில் வழங்கப்படும். தேர்வு எழுத வருபவரின் மேலாடை, அரைக்கை உடையதாக இருக்க வேண்டும். முழுக்கை உடைய மேலாடை அணிந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஷூ அணிந்து வரக்கூடாது, ஸ்லிப்பர் செருப்பு அணிந்து வரலாம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
Next Story