வீட்டு உரிமையாளரை குத்திய கொத்தனாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்திய கொத்தனாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்திய கொத்தனாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வில்லாபுரத்தை சேர்ந்த ராமலட்சுமி, கடந்த 2017ஆம் ஆண்டு சொந்த வீடு கட்டும் போது, கொத்தனார் வேல்பாண்டி உடன் தகராறு ஏற்பட்டது. அப்போது, ராமலட்சுமியை வேல்பாண்டி கத்தியால் குத்தினார். அவரை, போலீசார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்றம், வேல்பாண்டிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Next Story