சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?
மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக, தமிழக சட்டசபை ஜூன் மாதம் முதல் வாரத்தில் கூட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி, தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து 11, 12, 13 ஆகிய நாட்களில் பட்டஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. 14ஆம் தேதி, எம்.எல்ஏக்களின் விவாதத்திற்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பதிலளித்தார். இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவில்லை. கூட்டத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தால், ஜூன் முதல் வாரத்திலேயே மானியக் கோரிக்கைக்கான கூட்டத் தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் இல்லாவிட்டால் சற்று கால தாமதம் ஆகலாம் எனவும், சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக கூடிய நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story