3 மாதங்களுக்கு பின் புறப்பட்ட பெருமாள் சிலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலையின் பயணம் தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலையின் பயணம் தொடங்கியது. பெங்களூர் அருகேயுள்ள ஈஜிபுரம் பகுதியில் நிறுவுவதற்காக வந்தவாசியில் இருந்து, சுமார் 350 டன் எடை கொண்ட பெருமாள் சிலை கொண்டு செல்லப்பட்டது. சாமல்பள்ளம் என்னுமிடத்தில் பாலத்தை கடக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி மறுத்ததால், சிலையின் பயணம் தடைபட்டது. இந்நிலையில், பாலத்தின் அருகே தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டு மீண்டும் நேற்று மாலை, சிலையானது சாமல்பள்ளத்திலிருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story