1,500 ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு : ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி வெற்றி பெறாத அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என ஜாக்டோ, ஜியோ அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
1,500 ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு : ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் வலியுறுத்தல்
x
ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி வெற்றி பெறாத அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என ஜாக்டோ, ஜியோ அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், ஆசிரியர்கள் தவறு செய்யவில்லை என்றும்,  தமிழக அரசு 16 முறைக்கு பதிலாக 4 முறை தான் தகுதி தேர்வு நடத்தி உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசு மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த இந்த ஆசிரியர்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ஜாக்டோ  ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்