திருத்தணி கோவில் ஊழியர்கள் அடையாள அட்டை அணிய வேண்டும் : சிறப்பு பாதுகாப்பு படை ஆய்வாளர் அறிவுறுத்தல்
திருத்தணி கோவிலில் பாதுகாப்பு குறித்து சிறப்பு பாதுகாப்பு படை ஆய்வாளர் நிக்கேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
திருத்தணி கோவிலில் பாதுகாப்பு குறித்து சிறப்பு பாதுகாப்பு படை ஆய்வாளர் நிக்கேஷ் ஆய்வு மேற்கொண்டார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது கோவில் வளாகத்தில் தீவிரவாதிகள் குண்டுகள் வைத்து தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு நிக்கேஷ் நேரில் வந்து ஆய்வு செய்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது குறித்து கோவில் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், கோவிலில் பணியாற்றும் அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
Next Story