நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்திய நிலங்கள் : மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவு

நெடுஞ்சாலை அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டையில் வி.எல்.நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தபட்டு, அதற்கு இழப்பீடாக 12 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வழங்க 2004ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்திய நிலங்கள் : மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவு
x
நெடுஞ்சாலை அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டையில் வி.எல்.நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தபட்டு, அதற்கு இழப்பீடாக 12 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வழங்க 2004ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 14 ஆண்டுகள் கடந்தும் இழப்பீடு தொகை வழங்கவில்லை என்று அந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், குறித்த காலத்திற்குள் இழப்பீட்டு தொகையை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை வழங்குவதை கண்காணிக்க இரு மாவட்ட ஆட்சியர்கள், உயர் நீதிமன்ற சமரச தீர்வு மைய இயக்குநர் அடங்கிய குழுவினை அமைக்கும்படியும் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்