13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : உறவினர் போக்சோ சட்டத்தில் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்,13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், 13 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியின் உறவினர் இலியாஸ் ஆபாச படங்களை காட்டியும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியில் கூறினால் அப்பா, அம்மாவையும், சிறுமியையும் கொன்று விடுவதாக மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி கார்ப்பமானதை அடுத்து, அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, இலியாஸ் மிரட்டி வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் இலியாஸை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.
Next Story