பழனியில் தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பதியினர்... காப்பாற்றிய போலீசார்
பழனியில், தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பதியினரை போலீசார் மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகனுடன் பழனி வந்துள்ளார். பின்னர் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர், தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக தனது உறவினருக்கு போன் செய்துள்ளார். இதனால் பதறிப்போன உறவினர்கள் கேரள காவல் துறையினர் உதவியுடன் பழனி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பழனி பகுதியில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக பழனி மலை அடிவாரம் பகுதியில் தங்கி இருந்த ஸ்ரீநாத் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் பத்திரமாக மீட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story