சென்னை : போலி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.50 ஆயிரம் கொள்ளை
சென்னையில் தனியார் வங்கி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து போலி ஏ.டி.எம் கார்டு மூலம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையில் தனியார் வங்கி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து போலி ஏ.டி.எம் கார்டு மூலம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டையில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் ஆனந்த் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தாக குருஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த் தனியார் வங்கிய தொடர்பு கொண்டு கேட்ட போது, மர்ம நபர் ஒருவர் போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story