ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் அவசர நிலைக்கு ஏற்ப அவ்வப்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
அரசு மருத்துவமனையில் தேர்வு விதிமுறைகளை மீறி ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த செவிலியர் நியமன தேர்வில் கலந்து கொண்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமித்ததை ரத்து செய்யவும் அதில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்வு வாரிய விதிமுறைகளை மீறக்கூடாது என்றும் தேவைக்கேற்ப அவ்வப்போது தேர்வு நடத்தி அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். புதிய தேர்வு நடைமுறை முடியும் வரை ஒப்பந்தப் பணியாளர்கள் பணியில் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்