ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக அளவில் 10-வது இடம் பெற்ற கிராமத்து பெண்

தமிழக அளவில் 10-வது இடத்தை பெற்றவருக்கு விழா எடுத்த கிராம மக்கள்
x
சேலம் மாவட்டம், கொட்டவாடி பேளூர்கரடிப்பட்டியை சேர்ந்த  தர்மலாஸ்ரீ, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சிப் பணித் தேர்வில், அகில இந்திய அளவில் 409 -வது இடத்தையும், மாநில அளவில் 10-வது இடத்தையும் பிடித்துள்ளார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வசிகாமணி, வசந்தி தம்பதியரின் மூத்த மகளான பொறியியல் பட்டதாரி தர்மலாஸ்ரீ, நான்கு முறை தோல்வியை தழுவிய நிலையில், ஐந்தாவது முறையாக முயன்று வெற்றி பெற்றுள்ளார். தங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்த்த அவருக்கு, கொட்டவாடி கிராம மக்கள் ஒன்றிணைந்து பாராட்டு விழா  நடத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.மேலும்,  தோல்வியடைந்து விட்டால் சோர்ந்து விடாமல், தொடர்ந்து படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்த தர்மலாஸ்ரீ, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவது  மட்டுமல்ல, அவர்கள் கனவு எதுவானாலும், அவர்களின் தனிதிறமையை வெளிக் கொணர்ந்து அவர்கள் உணர்வுக்கு பெற்றோர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதனிடையே, இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றிப் பெற பெரிய பின்புலம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சியாளர் சிவராஜவேல் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்