ஒட்டப்பிடாரம் தொகுதியில், ஸ்டாலின் திண்ணை பிரசாரம்
2வது நாளாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, இரண்டாவது நாளாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அத்திமரப்பட்டி,காலங்கரை, தெய்வநாயகபேரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து, தொகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகளை அவர் கேட்டறிந்தார். அப்போது, குடிநீர் பிரச்சனை, வடிகால் பிரச்சனை மற்றும் குளம் தூர் வாருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என ஸ்டாலினிடம், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி., கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டமுக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story