ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையைக் கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
ஃபானி புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசா மாநிலம் பூரி அருகே கடையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஃபானி புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசா மாநிலம் பூரி அருகே கடையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், ஃபானி புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும், கடலோர மாவட்டங்களில் லேசான காற்று வீசக்கூடும் என்றும் கூறினார். சென்னையில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த புயல், அதி தீவிர புயலாக மாறி வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 3 ஆம் தேதி பூரி அருகே கரையை கடக்கும் என்றும் கூறினார். சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story