பவானி அணைக்குள் மூழ்கியிருக்கும் அபூர்வ கற்கோயில்...
பவானி சாகர் அணைக்குள் மூழ்கி, தமிழர் புகழை பறைசாற்றும் கோயிலை சுற்றி தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது .. நீர்வரத்து குறைந்ததால், பவானிசாகர் அணை நீர்மட்டம் 52 அடியாக சரிந்த நிலையில், அணைக்குள் மூழ்கியிருக்கும் தனநாயக்கன்கோட்டை கோயில் வெளியே தெரிகிறது. கிராமங்கள் இருந்த இடத்தில் தனநாயக்கன் என்ற மன்னன் தாம் வழிபட நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கட்டியதுதான் அந்தக் கோயில். இந்த அணை நீருக்குள் மூழ்கியிருக்கும் 800 ஆண்டு கால கோயிலில், தமிழர் வரலாறும் புதைந்திருப்பதாக கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள். வடவள்ளி, பீர்கடவு, பட்டரமங்கலம், குய்யனூர் உள்ளிட்ட 5 கிராமத்தினரையும் வெளியேற்றி, பண்ணாரி வனப்பகுதியில் குடியமர்த்தப்பட்டதாக வரலாறு. அணைக்குள் மூழ்கிய நிலையில், எஞ்சியுள்ள மாதவராய பெருமாள் கோயில் மட்டுமே தெரியும் நிலையில், நீர் மட்டம் குறைந்தால் மங்களாம்பிகை உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் தெரியும்.
மூழ்கியுள்ள கோயிலில் கல்வெட்டுகள் ஏராளம். அதில், தமிழர் வரலாறும், அப்பகுதியின் நிலவியல் கோட்பாடும் பொறிக்கப்பட்டுள்ளன. பண்டைய மக்களின் வாழ்வியல் ஒழிந்து கிடக்கிறது. கீழடி, ஆதிச்சநல்லூர் ஆய்வுக்கும் வலுசேர்க்கும் என்பது இப்பகுதி மக்களின் ஏக்க குரல். அதுபோக கோயிலுக்கு தரிசனம் செய்ய படகு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கை...
Next Story