நடுரோட்டில் நின்ற ஆம்புலன்ஸ் : 30 நிமிடங்கள் கழித்து வந்த மாற்று ஆம்புலன்ஸ்
நடுவழியில் பழுதாகி நின்ற ஆம்புலன்சால், நோயாளி ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடுவழியில் பழுதாகி நின்ற ஆம்புலன்சால், நோயாளி ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அரசு மருத்துவமனையில் வயிற்று வலி பிரச்சனையால் அனுமதிக்கப்பட்டிருந்த திருமூர்த்தி என்பவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குன்னூர் லெவல் கிராஸிங் அருகே வந்த போது திடீரென்று ஆம்புலன்ஸ் பழுதாகி நடுரோட்டில் நின்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் மற்றொரு ஆம்புலென்ஸ் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் திருமூர்த்திக்கு முதலுதவி கருவிகள் பொருத்தப்பட்டு, சுமார் அரை மணி நேரம் தாமதமாக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Next Story