சட்டமன்ற இடைத்தேர்தல் - 152 வேட்பு மனுக்கள் ஏற்பு : 104 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் நடைபெற உள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 152 வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 152 வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான, இடைத்தேர்தல், மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 104 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் 3 மணிக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.
Next Story