தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு நோட்டீஸ் : 7 நாட்களுக்குள் விளக்கம் தர சபாநாயகர் உத்தரவு

தினகரன் ஆதரவாளர்களாக உள்ள மூன்று எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
x
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களில், அறந்தாங்கி - ரத்தினசபாபதி, விருத்தாசலம் - கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி - பிரபு ஆகியோர், தினகரன் ஆதரவாளர்களாக உள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அதிமுக கொறடா ராஜேந்திரன், மூன்று பேர் மீதான புகார் மனுவுடன், வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களையும், கடந்த சில தினங்களுக்கு முன்பு சபாநாயகர் தனபாலிடம் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், சபாநாயகர் தனபால், மூன்று எம்.எல்.ஏ.,க்களும் விளக்கம் அளிக்கக் கோரி, நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 3 பேரும் 7 நாட்களுக்குள் நேரிலோ அல்லது எழுத்துபூர்வமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்