சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் தவறுதலான அறிவிப்பு - மக்களிடையே குழப்பம்

சென்னை மெட்ரோ ரயில்நிலையத்தில், தவறுதலான அறிவிப்பு காரணமாக, பயணிகள் ஓட்டம் எடுத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
x
எட்டு மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அனுபவமற்ற ஆட்களைக் கொண்டு, மெட்ரோ சேவை தொடர்வதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ பரவும் அபாயம் இருப்பதாக, ஊழியர் ஒருவர் தவறுதலான அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, பயணிகள் ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. சில இடங்களில் சிக்னல் கோளாறாகி, ரயில்களை இயக்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பிராட்வேயில் உள்ள குறளகத்தில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன், மெட்ரோ நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் பிறகே, மெட்ரோ ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடருமா அல்லது வாபஸ் பெறப்படும் என்பது குறித்து தெரியவரும். 

Next Story

மேலும் செய்திகள்