3 கோயில்களின் பெருமாள் வீதியுலா : அலங்கார பல்லக்கில் வலம் வந்த சுவாமிகள்

கும்பகோணத்தில் 3 கோயில்களின் பெருமாள் எழுந்தருள பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.
3 கோயில்களின் பெருமாள் வீதியுலா : அலங்கார பல்லக்கில் வலம் வந்த சுவாமிகள்
x
கும்பகோணத்தில் 3 கோயில்களின் பெருமாள் எழுந்தருள பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. சக்கரபாணி கோயில், ராமசாமி கோயில், சாரங்கபாணி கோயில்களில் இருந்து மின்னொளி அலங்கார பல்லக்கில், வண்ண மலர் அலங்காரத்துடன் பெருமாள் எழுந்தருள நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர். இந்த நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்தனர்.

காளியம்மன் கோயில் பெரிய தேரோட்டம்  : 18 கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்



தர்மபுரி மாவட்டம் இண்டூர் நத்தஅள்ளியில்  உள்ள காளியம்மன் கோயில் பெரிய தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று தொடங்கி 15 நாட்களுக்கு ஜாத்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 18 கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மாரியம்மன் கோயில் திருக்கல்யாண உற்சவ விழா : சக்தி கரகம், மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி



கோவை மாவட்டம் சோமையனூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான சக்தி கரகம் எடுத்தல், பொங்கல் மற்றும் மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் சக்தி கரகத்தை எடுத்து வந்து கோவில் அடைந்தனர். முன்னதாக சக்தி கரகத்தை கொண்டு வரும்போது, ஊரிலுள்ள பொதுமக்கள் பாட்டு பாடி நடனம் ஆடினர். அதனை தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டு மாவிளக்கு எடுத்து வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்