நெஞ்சுவலி ஏற்பட்டு மருந்தாளுநர் மருத்துவமனையில் அனுமதி : உயர் அதிகாரின் நெருக்கடி காரணம் என குற்றச்சாட்டு

திருவாரூரில் உயர் அதிகாரியின் நெருக்கடி காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டு, மருந்தாளுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சுவலி ஏற்பட்டு மருந்தாளுநர் மருத்துவமனையில் அனுமதி : உயர் அதிகாரின் நெருக்கடி காரணம் என குற்றச்சாட்டு
x
திருவாரூரில் உயர் அதிகாரியின் நெருக்கடி காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டு, மருந்தாளுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அடியக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தியாகராஜன் என்பவர் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இவரிடம் மருந்து இருப்பு குறித்தும், காலாவதியான மருந்துகளுக்கு பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என கூறி சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சவுந்தராஜன், துறை ரீதியான நடவடிக்கையை ஸ்டான்லி மைக்கேல் கைவிடாவிட்டால் மிக பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்