தெருக் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை - பொதுமக்கள் குற்றச்சாட்டு
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே, குடிநீர் பிரச்சினையை கண்டித்து, பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே, குடிநீர் பிரச்சினையை கண்டித்து, பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தென்கீரனூர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்கு ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரும்பாலானோர் அங்கு மின்மோட்டார் மூலம் தண்ணீரை திருடுவதாகவும், இதனால் தெருக்குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால் ஆவேசமடைந்த பெண்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி - மலைக்கோட்டாலம் சாலையில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில், காலி குடங்களுடன் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். தகவலறிந்து வந்த போலீசார் , உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story