"தமிழகத்துக்கு கூடுதலாக 345 மருத்துவ இடங்கள்"
மதுரை 95, நெல்லை 100, கரூருக்கு150 இடங்கள் வழங்க முடிவு
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான 345 புதிய இடங்கள் ஒதுக்குவதற்கான ஆய்வுகள் முடிந்துவிட்டதாக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும் போது இவ்வாறு கூறினார். மதுரை மருத்துவக் கல்லூரில் 95 இடங்களும், நெல்லை மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், கரூர் மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் ஒதுக்க இந்திய மருத்துவக் கழகம் ஆய்வுகளை முடித்துவிட்டதாகவும், இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் ஆன்லைன் முறையில் நடத்த, சோதனை முயற்சிகள் நடந்து வருவதாகவும் எட்வின் ஜோ கூறினார்.
Next Story