"பழைய சோற்று கஞ்சி, இணை உணவாக ஊறுகாய்" - நடிகர் கருணாஸின் பாரம்பரிய உணவு விடுதி
திண்டுக்கல்லில், பாரம்பரிய உணவுகளை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக, நடிகர் கருணாஸ் இந்த ஹோட்டலை தொடங்கி உள்ளார்
பூட்டுக்கு அடுத்தபடியாக பிரியாணிக்கு பெயர்போன திண்டுக்கல்லில், பாரம்பரிய உணவுகளை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக, நடிகர் கருணாஸ் இந்த ஹோட்டலை தொடங்கி உள்ளார். பலவித மசாலா நிறைந்த உணவுகளுக்கு மத்தியில், மண் மனம் மாறாமல் பாரம்பரிய உணவு வகைகள் இந்த ரெஸ்ட்டாரண்ட்டில் கிடைக்கிறது. கம்மங்கூழ், பழைய சோற்று கஞ்சி, இணை உணவாக ஊறுகாய், மாங்காய் துண்டுகள், சிறிய வெங்காயம், மோர் மிளகாய் என நாவில் எச்சில் ஊறச்செய்கிறது, இங்கு கிடைக்கும் பதார்த்தங்கள்.தற்போது கோடைக்காலம் என்பதால் உடல் வெப்பத்தை தணிக்கும் விதமாகவும், ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் வகையிலும், வழங்கி வருவதாக, சமையல் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story