குரங்கனி காட்டுத் தீ விபத்து வழக்கு : பெல்ஜியம் பயிற்சியாளர் மீதான விசாரணைக்கு தடை
குரங்கனி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்றதாக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மலையேற்றப் பயிற்சிக்கு தலைமை வகித்ததாக கூறி, குரங்கனி போலீஸார் தம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், தீ விபத்து சம்பவத்தின் போது தாம் பெல்ஜியத்தில் இருந்ததாகவும் பீட்டர் தமது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், போடிநாயக்கனூர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடைவிதிப்பதோடு தம் மீது பதிந்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் பீட்டர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்ததுடன் வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
Next Story