நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்களளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் 2020ற்குள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என நிதி ஆதியோக் அமைப்பின் எச்சரிக்கையை மேற்கொள் காட்டி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் சுந்தர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்களையும் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தூர்வார இயந்திரங்களை வாங்கியது போல அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தூர்வாரும் பணிக்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்