உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...?

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...?
x
சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் , அது மண்டலமாகவும், தொடர்ந்து புயல் சின்னமாகவும் உருவாக வாய்ப்பு உள்ளது என நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த‌து. இந்த நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரமணமாக வரும் 28 மற்றும் 29  ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்