டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம்...
டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொது நல மனு, வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் எஸ் எஸ் சுந்தர் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய கூடாது என நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். டிக்டாக் நிறுவனம் அளித்த உறுதிமொழியை, மீறும் பட்சத்தில், நீதிமன்றம் தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
Next Story