சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை
தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்று சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸடெர்லைட் ஆலை, மக்கள் போராட்டங்கள் காரணமாக தொடர்ந்து இயங்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆலையின் 2 ம் கட்ட விரிவாக்கத்துக்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல், தமிழ்நாடு அரசின் சிபகாட் நிறுவனம் நிலம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முத்துராமன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய சுற்று சூழல் அமைச்சக இயக்குனர் கலியபெருமாள் தலைமையிலான அதிகாரிகள் தூத்துக்குடிக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலியபெருமாள், ஸடெர்லைட் ஆலை இரண்டாம் கட்ட விரிவாக்க கட்டுமானப் பணிகள் மற்றும் மின் இணைப்பு வழங்குவதற்காக பணிகள் நடைபெற்றுள்ளன. அதற்கான ஆதாரங்களை மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் அளிக்க உள்ளதாக கூறினார்.
Next Story