"28,29ம் தேதி தென் தமிழகத்தில் மழை" - வானிலை ஆய்வு மையம்

மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாற வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்.
28,29ம் தேதி தென் தமிழகத்தில் மழை - வானிலை ஆய்வு மையம்
x
வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின் படி, அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.  அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், அந்த காற்றழுத்த பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று  புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல் மண்டலமானது தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்பதால், வரும் 28 ஆம் தேதி தென் தமிழக கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 29ஆம் தேதி, தமிழகத்தின் பல பகுதிகளில் பரலவாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்