மக்களவை தேர்தலின் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக 63 புள்ளி 24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 117 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இதில் ஓடிசாவில் 58 புள்ளி 18 சதவீதம், திரிபுராவில் 78 புள்ளி 52 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 57 புள்ளி 74 சதவீதம், மேற்கு வங்கத்தில் 79 புள்ளி 36 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தில் 65 புள்ளி 91 சதவீதமும், தாத்ரா-நாகர் ஹவேலியில் 71 புள்ளி 43 சதவீதம், டாமன் டையூவில் 65 புள்ளி 34 சதவீதமும், அசாமில், 78 புள்ளி 29 சதவீதமும் ஓட்டுப்பதிவானது.பீகார் மாநிலத்தில் 59 புள்ளி 97 சதவீதம், கோவாவில் 71 புள்ளி 9 சதவீதம், குஜராத்தில் 60 புள்ளி 21 சதவீதம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 12 புள்ளி 86 சதவீதமும் வாக்குகள் பதிவானது.கர்நாடகாவில் 64 புள்ளி 14 சதவீதம், கேரள மாநிலத்தில் 70 புள்ளி 21 சதவீதம், மகாராஷ்டிராவில் 56 புள்ளி 57 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.
Next Story