வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
x
ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும், பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு, ஏற்கனவே உயர்மட்ட குழு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் உள்ளதால், புதிய குழு அமைக்க தேவையில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல் வழக்கு விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்த வைகோ, விசாரணைக்காக வந்திருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஸ்டெர்லைட் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை, என்றார்


Next Story

மேலும் செய்திகள்