தமிழகத்தில் பரவலாக மழை...
கொடைக்கானல் பகுதியில் நான்காவது நாளாக இடிமின்னலுடன் கன மழை கொட்டிதீர்த்தது.
கொடைக்கானல் பகுதியில் நான்காவது நாளாக இடிமின்னலுடன் கன மழை கொட்டிதீர்த்தது. மாலை 6 மணிக்கு லேசான சாரல் மழை தொடங்கி பின்னர் பலத்த இடி மின்னலுடன் 3 மணிநேரம் கனமழை வெளுத்து வாங்கியது.இதனால் பல்வேறு இடங்களில்மரக்கிளைகள் முறிந்துமின்கம்பங்களில் விழுந்ததால்சுமார் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது இதன் காரணமாக பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடுமைமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்துபெய்துவரும் கோடை மழை காரணமாகநகருக்கு குடிநீர் வழங்கும்அணைகளுக்கும், நட்சத்திரஏரிக்கும் பேரிஜம் ஏரிக்கும்தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.கனமழை காரணமாக அப்சர் வேட்டரி செல்லும் சாலையில் மின்கம்பம் சாய்ந்ததில் 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம்
சேலத்தில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாகவே சேலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி பட்டு வந்தனர். இந்நிலையில், சேலம் மாநகர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பாதுகாப்பு காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையினால் சேலம் மாநகர பகுதிகளில் நிலவி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில் மின்கம்பம்,மற்றும் மரங்கள் சாய்ந்தன.கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், அங்காங்கே இருந்த மரங்களும் மின்கம்பமும் சாய்ந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டுள்ளது. தாராபுரம் மாரியம்மன் கோவில் கோபுரத்தில் இடி தாக்கி கோபுர சுவர்கள் சேதம் அடைந்தது.கடும் வெயிலில் பாதிக்கபட்டிருந்த பொதுமக்கள் காற்றுடன் கூடிய மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாணியம்பாடி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில மாதங்களாக வாணியம்பாடி சுற்று வட்டார பகுதியில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், வாணியம்பாடி நகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
Next Story