கிணறு வெட்டும் போது கிரேன் கயிறு அறுந்து விபத்து
கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கிரேன் கயிறு அறுந்து மண் அள்ள பயன்படும் இரும்பு தட்டு விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.
திருவண்ணாமலை ஆலத்தூரில், தனியார் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது.இதில் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக கிரேனின் கயிறு அறுந்து மண் அள்ள பயன்படுத்தப்பட்ட ராட்சத தட்டு அவர்கள் மீது விழுந்தது.இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.படுகாயத்துடன் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை எடுத்து சென்று திருவண்ணாமலை- காஞ்சிபுரம் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் கண்ணாடி மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் மறியல் கைவிடப்பட்டது.இதனால் அங்கு சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Next Story