அரசு பள்ளியின் அவல நிலை - பள்ளி திறப்பதற்கு முன் சரி செய்ய கோரிக்கை

ஓமலூர் அருகே ஓடுகள் பழுதான நிலையில், தார்ப்பாய் போர்த்தப்பட்டுள்ள அரசு பள்ளியை, திறப்பதற்கு முன்னதாக சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
அரசு பள்ளியின் அவல நிலை - பள்ளி திறப்பதற்கு முன் சரி செய்ய கோரிக்கை
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நைனாக்காடு என்ற பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 30 ஆண்டுகளாக ஓடுகள் மாற்றப்படாத‌தால் பல இடங்களில் உடைந்துள்ளது.சில சமயம் தங்கள் மீது ஓடுகள் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.உடைந்த இடங்கள் வழியாக மழை நீர் புகுந்து வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்குவதால்,தார்ப்பாய் போர்த்தி, மாணவர்கள் கல்வி கற்று வந்துள்ளனர்.இந்நிலையில்,கடுமையான வெயிலின் தாக்கத்தால், தார்ப்பாயும் கிழிந்து தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன.எனவே,விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன்பாக ஓடுகளை சரிசெய்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்