சாலை வசதி இல்லாததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற குதிரைகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமமான வெள்ளகெவிக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமமான வெள்ளகெவிக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. சுமார் 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட இந்த கிராமத்தில், உரிய சாலை வசதி இல்லை. இதையடுத்து, கொடைக்கானல் வட்டக்காணல் பகுதியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது நக்சல் தடுப்பு சிறப்புக் காவலர்கள், வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
Next Story