தமிழகத்தில் பரவலாக மழை...

நெல்லை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
தமிழகத்தில் பரவலாக மழை...
x
நெல்லை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக 100 டிகிரி ஃபாரன்ஹூட்டுக்கு மேல் வெயில் வாட்டிய நிலையில், திடீரென பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இதனால் கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  சூறைக்காற்றில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த தேர்தல் திருவிழா பதாகைகள் சரிந்து விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இடி மின்னல் சூறாவளிக் காற்றுடன் திடீர் மழை பெய்தது. கோடை காலை வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகலில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த கோடை மழை காரணமாக சாலைகளில் மழை நீர்  பெருக்கெடுத்து ஓடியது.கோடை வெயிலில் சிக்கித்தவித்து கொண்டிருந்த பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே திடீரென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில்,  புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, எமனேஸ்வரம், பார்த்திபனூர், சூடியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை சுமார் அரை மணிநேரம் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. கோடை வெயிலை தணிக்கும் விதமாக மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 



Next Story

மேலும் செய்திகள்