"இந்த ஆண்டு வழக்கமான மழைப்பொழிவு இருக்கும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்த ஆண்டு வழக்கமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் பருவ மழைக் காலத்தில் பெய்யும் மழையின் அளவு தொடர்பான கணிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்குப் பருவ மழை இந்த ஆண்டு வழக்கமான அளவில் பெய்யும் எனவும் சராசரியான 96 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் கூடவோ,குறையவோ வாய்ப்பு இரப்பதாகவும் தெரிவித்துள்ளது.எல் நினோ பலவீனத்தால் பருவ மழை காலத்தின் இறுதிப் பகுதி வலுக் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் அது குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 2019 பருவ மழை காலத்தில் இந்தியாவில் பரவலாக சராசரி மழை பெய்யும் என்பதால், 'காரீப்' விளைச்சல் நிச்சயம் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது
Next Story