நிர்மலாதேவி நேரில் ஆஜராக வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தவறான பாதைக்கு கல்லூரி மாணவிகளை அழைத்த வழக்கில் நிர்மலா தேவி ஏப்ரல் 22 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தவறான பாதைக்கு கல்லூரி மாணவிகளை அழைத்த வழக்கில் நிர்மலா தேவி ஏப்ரல் 22 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், முறையீடு செய்தார்.
அப்போது, நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கும் போது அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டினார்.
இருந்த போதிலும் நிர்மலாதேவி பற்றிய செய்திகள் தமிழ் வார இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் நிலையில் அந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகள் கிருபாகரன் - எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு அரவிந்த் பாண்டியன் முறையீடு செய்தார்.
அதனை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே நிர்மலாதேவி நேரில் ஆஜராகி பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்து உள்ளார் என்றும் அவரிடம் மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டி உள்ளதால் ஏப்ரல் 22 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்
Next Story