"புரட்சிக்கான விதையை தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும்" - கமல்ஹாசன்
புதிய புரட்சிக்கான விதையை மக்கள் தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும் என்றும், புதிய தமிழகத்திற்கு வித்திடும் நாளாக இதை மாற்ற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதிய புரட்சிக்கான விதையை மக்கள் தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும் என்றும், புதிய தமிழகத்திற்கு வித்திடும் நாளாக இதை மாற்ற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஓட்டேரி பகுதியில், வடசென்னை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.ஜி.மௌரியாவை ஆதரித்து, கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒன்றாக இருக்கும் இடத்தில் பிரிவினை பேச வந்தீர்கள் என்றால் அடித்து துரத்தப்படுவீர்கள் என்றும், இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பிரிவினை பேசுபவர்களை வெளியேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.
Next Story