"மாசு விளைவிக்காமல் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வருவோம்" - கமல்ஹாசன்
சிவகாசி பகுதியில் ஆபத்து இல்லாமலும் மாசு விளைவிக்காமலும் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி பகுதியில் ஆபத்து இல்லாமலும் மாசு விளைவிக்காமலும் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், பசுமை பட்டாசுக்கு என்ன வழி என்பதை வெடிபொருள் விஞ்ஞானிகளுடன் கலந்து பேசிக் கொண்டிருப்பதாக கூறினார். நீட் தேர்வு வேண்டாம் என்றால் தமிழகம் முன்னேறி விடுமா? என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
Next Story