தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலானது - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலாக மாறியுள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலாக மாறியுள்ளதாக  முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.  சென்னை, தரமணியில் ஊடகக் கல்வி நிறுவனம் ஒன்றில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், தான் பதவியில் இருந்த போது  பீகார், உத்திரப்பிரசேதம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தியது கடினமாக இருந்தது என்றும் ஆனால் தமிழகத்தில் தேர்தல் நடத்துவது கடந்த பத்து ஆண்டுகளில் சவாலாக மாறியுள்ளது என்றும் கூறினார்.  நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவும் பங்கேற்று அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்