பிரசாரத்தின் போது ஆரத்திக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு

ஓட்டுக்கு பணம் பெறுவது குற்றம் என அனைத்து வாக்குச்சாவடிகள் முன், விளம்பர பலகைகள் வைக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
x
ஓட்டுக்கு பணம் பெறுவது குற்றம் என அனைத்து வாக்குச்சாவடிகள் முன், விளம்பர பலகைகள் வைக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் சூரியபிரகசம் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதே கோரிக்கைகளுடன் கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கும், பணப்பட்டுவாடா குறித்த புகார்களில் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாக, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர் நிகழ்ச்சிகள் நடத்தி, துண்டறிக்கைகள் வழங்கி வருவதாக கூறப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்