இயக்குநர் அட்லியின் அடுத்த படத்தில் ஷாருக்கானா...?

இயக்குநர் அட்லியின் அடுத்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
x
இயக்குநர் அட்லியின் அடுத்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் நடிகர் ஷாரூக்கானின் அருகில், இயக்குநர் அட்லி அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  இந்நிலையில், தளபதி 63 படத்தில் ஷாரூக்கானை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும், மெர்சல் படத்தின் இந்தி ரீமேக்கை  ஷாரூக்கானை வைத்து இயக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்