முதுமலையில் கும்கி யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகளுக்கு 48 நாட்களாக நடைபெற்று வந்த புத்துணர்வு முகாம் நிறைவுபெற்றது.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகளுக்கு 48 நாட்களாக நடைபெற்று வந்த புத்துணர்வு முகாம் நிறைவுபெற்றது. புத்துணர்ர்சி காலத்தில் யானைகளுக்கு தினமும் 2 வேளை மாயார் ஆற்றில் சிறப்பு குளியல் அளிக்கப்பட்டதால் கும்கி யானைகள் எடை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த காலத்தில் யானைகளுக்கு சிறப்பு உணவாக ராகி, அரிசி, தேங்காய் பழம், பசுந்தீவணம் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. புத்துணர்வு முகாம் நிறைவடைந்து விட்டதால் யானைகள் ரோந்து பணி மற்றும் யானை சவாரியில் ஈடுபடுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story