100 % வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு : சுமார் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாக இணைந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தினர். '100 சதவிகித ஓட்டு, மை விரல்' போன்ற வடிவில் நின்று ஆச்சர்யப்படுத்தினர்..
Next Story