வெங்கட் பிரபுவின் ஆர்.கே நகர் ரிலீஸ் தள்ளி வைப்பு
தேர்தலை காரணம் காட்டி ஆர்.கே.நகர் படத்தை வெளியிட சிலர் தடையாக இருப்பதாக படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தலை காரணம் காட்டி ஆர்.கே. நகர் படத்தை வெளியிட சிலர் தடையாக இருப்பதாக படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இது அரசியல் சார்ந்த படம் இல்லை என்றும், யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், தேர்தலை காரணம் காட்டி இந்த படத்தை வெளியிட சிலர் தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள வெங்கட் பிரபு, அவர்கள் யார் என்று தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார். இதனால் வரும் 12ஆம் தேதி வெளியாக இருந்த ஆர்.கே.நகர் திரைப்படம், தேர்தல் முடிந்ததும் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
Next Story